Close Menu
    What's Hot

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    கூடுதல் கட்டணம் வசூலிப்பு; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை!

    இன்று சமூக ஊடக தினம்;  சமூக ஊடகங்களை கவனமுடன் கையாள்வோம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தூங்கு ராஜா தூங்கு..! மறைந்த இயக்குநர் பாரதிராஜா நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை..!
    Featured

    தூங்கு ராஜா தூங்கு..! மறைந்த இயக்குநர் பாரதிராஜா நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை..!

    Editor web4By Editor web4June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமான நிலையில், சமீபத்தில அவரது உதவி இயக்குநராக இருந்து சினிமாவில் வளர்ந்த இயக்குநர் பாக்யராஜூம் மறைந்தது சினிமா திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் பாராதிராஜாவின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”இமயத்தைப்

    புதைத்த இடம் இதுதான்

    தூங்கு ராஜா தூங்கு

    ஓடி ஓடிக் களைத்தவனே

    கலையாத உறக்கத்தில்

    கனவுகளற்ற உறக்கத்தில்

    ஓய்வுகொள்

    மண்ணை இழுத்துப் போர்த்துப்

    படுத்திருக்கும் உன்னை

    குளிரோ மழையோ

    வெயிலோ புயலோ

    ஒன்றும் செய்யாது

    நலம் கேட்க வந்த நான்

    நல்லசெய்தி

    கொண்டுவரவில்லை

    இதே இடத்தில்

    என்னோடு நின்று

    இறுதி மரியாதை செலுத்திய

    உன் சீடன்

    உனைத்தேடி வந்துவிட்டான்

    ஜோடிக் குதிரைகளை இழந்து

    கவிழ்ந்து கிடக்கிறது

    கலைத்தேர்

    கடமை இருக்கிறது

    இந்த மண்ணகத்தில்

    உனக்கொரு மணிமண்டபம்;

    அரசுக்குக்

    கோரிக்கை வைக்கிறேன்

    முதலமைச்சர் விஜயைச்

    சந்திக்கவும் தயங்கமாட்டேன்

    இந்த இடம்

    கலைக்கோயிலாக

    என்று கட்டப்படுமோ

    அன்று

    தேனி மாவட்டம் முழுக்க

    தேவர்கள் பூச்சொரிவர்” என பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொங்கு சனீஸ்வர கோயிலில் முன்னாள் வீரர் சேத்தன் சர்மா..! குடும்பத்துடன் சாமி தரிசனம்..!
    Next Article கிருஷ்ணகிரி : தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..! காதலியை எரித்து கொன்றது விசாரணையில் அம்பலம்..!
    Editor web4

    Related Posts

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    June 30, 2026

    கூடுதல் கட்டணம் வசூலிப்பு; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை!

    June 30, 2026

    இன்று சமூக ஊடக தினம்;  சமூக ஊடகங்களை கவனமுடன் கையாள்வோம்!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    கூடுதல் கட்டணம் வசூலிப்பு; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை!

    இன்று சமூக ஊடக தினம்;  சமூக ஊடகங்களை கவனமுடன் கையாள்வோம்!

    7 இல்ல..!! 12 தொகுதிகளை குறிவைத்த தவெக..!! இடைத்தேர்தல் கணக்கால் கலங்கும் அறிவாலயம்..!!

    பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ.5 இலட்சம் போதைப் பொருட்கள் கடத்தல் –  4 பேர் கைது; 2 சொகுசு கார்கள் பறிமுதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.