Close Menu
    What's Hot

    ‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!

    வருமான வரி தாக்கல்!. ஜூலை மாதத்தில் இதையெல்லாம் செஞ்சிருங்க! இல்லையென்றால் அபராதம்!

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் 2026: இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்!
    Featured

    குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் 2026: இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 glopab
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் ஆஸ்திரேலியா 2026 போட்டியில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

    ஜூன் 23 முதல் 29 வரை நடைபெற்ற இந்த சர்வதேச திறன் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள், நிபுணர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் Additive Manufacturing பிரிவில் கர்நாடகவின் பவன் பத்ராவதி சுரேஷா, – Cloud Computing பிரிவில் டெல்லியை சேர்ந்த மௌசம் குமார் கிரி,  – Health and Social Care பிரிவில் டெல்லியைச் சேர்த விஷ்ணுப்ரியா சுனில் ஆகியோ தங்கப்பதக்கங்களை வென்றனர்.

    3D Digital Game Art பிரிவில் மகாராஷ்டிராவின் ஹர்ஷ் ரமேஷ் வெள்ளிப் பதக்கமும்,  Painting and Decorating பிரிவில் ஹரியானவின் முஸ்கான்–வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    012 glopab A

    இந்த வெற்றி, மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், படைப்பாற்றல் துறைகள் மற்றும் சேவைத் திறன்களில் இந்திய இளைஞர்களின் உலகளாவிய போட்டித்திறன் உயர்ந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, “3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என இந்திய அணி வென்றிருப்பது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சாதனை. இது போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் துறை பங்குதாரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அனுபவம், இந்த ஆண்டு ஷாங்காயில் நடைபெறவுள்ள 48-வது WorldSkills போட்டிக்கான எங்கள் தயாரிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது,” என்று கூறினார்.

    15 போட்டியாளர்கள் மற்றும் 15 நிபுணர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட இந்திய அணி, 15 திறன் பிரிவுகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது. உலகத் தர மதிப்பீட்டு முறையின்படி நடைபெற்ற இந்தப் போட்டி, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இந்திய இளைஞர்களின் தொழில்திறனை மேலும் மேம்படுத்த உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் இந்தப் பங்கேற்பு, Skill India Mission திட்டத்தின் ஒரு பகுதியாகும். உலகத் தரம் வாய்ந்த திறன்மிக்க மனித வளத்தை உருவாக்கி, இந்திய இளைஞர்களை உலகின் சிறந்த திறனாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    Australia Bronze Medal Global Skills Challenge 2026 Gold Medal india Silver Medal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசந்தர்ப்பவாத எடப்பாடி பழனிசாமி; தீய சக்தியுடன் எப்படி அதிமுக கைகோர்க்க முடியும்? – அதிமுகவை விட்டு வெளியேறினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்
    Next Article வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!
    Editor TN Talks

    Related Posts

    ‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!

    June 30, 2026

    வருமான வரி தாக்கல்!. ஜூலை மாதத்தில் இதையெல்லாம் செஞ்சிருங்க! இல்லையென்றால் அபராதம்!

    June 30, 2026

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!

    வருமான வரி தாக்கல்!. ஜூலை மாதத்தில் இதையெல்லாம் செஞ்சிருங்க! இல்லையென்றால் அபராதம்!

    பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவர் பிறந்த நாள்;  அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

    ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு மீண்டும் அவகாசம்

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.