Close Menu
    What's Hot

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு..! எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!
    Featured

    முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு..! எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..!

    Editor web4By Editor web4July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருச்​செந்​தூர் அருகே ஆத்​தூர் பகு​தி​யில் ஜூன் 20 ஆம் தேதி முன்​னாள் முதல்​வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு, திமுக சார்​பில் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பேசிய, திருச்​செந்​தூர் தொகுதி திமுக எம்​எல்​ஏ ​அனிதா ரா​தாகிருஷ்ணன், முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், அவதூறாக​வும் பேசி​ய​தாக, தவெக நகரச் செய​லா​ளர் செல்​வம், ஆத்​தூர் காவல் நிலையத்​தில் புகாரளித்​தார்.

    இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ​ரா​தாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

    இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இந்த பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் தாக்கல் செய்திருக்க வேண்டுமே தவிர, போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

    காவல் துறை தரப்பில், ஏழு முறை எம் எல்.ஏ.வாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும். இந்த வழக்கை பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 1967 ஆம் ஆண்டுக்கு பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாம் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தோம். மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல; எம்.எல்.ஏ.வாக உள்ளவர். அவர் ஏன் இதுபோல பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பி, அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரம்பூர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு..!! விரைவில் வருகிறது பிரத்யேக மொபைல் APP..!!
    Next Article கட்சியை எப்படியாவது காப்பாத்தணும்…!! களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! முக்கிய ஆலோசனை..!!
    Editor web4

    Related Posts

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    July 3, 2026

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    July 3, 2026

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.