Close Menu
    What's Hot

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவில் விழாவில் சோகம்!. நடனமாடிய நபர் மேடையிலேயே சரிந்து விழுந்து மரணம்!
    Featured

    கோவில் விழாவில் சோகம்!. நடனமாடிய நபர் மேடையிலேயே சரிந்து விழுந்து மரணம்!

    Editor web3By Editor web3July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    karur festival dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்டம் மணவாசி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கரூர் அருகே உள்ள தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, இரவு நேர கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தனது நடனக் குழுவினருடன் கலந்துகொண்ட ஜீவா, மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடிக்கொண்டிருந்தார்.

    அப்போது, எதிர்பாராத விதமாக ஜீவா திடீரென மேடையிலேயே மயங்கிச் சரிந்து விழுந்தார். இதைக் கண்டு அங்கிருந்தவர்களும், அவருடன் ஆடிக்கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். மேடையில் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்த கலைஞரின் உயிர், கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்த சம்பவம், சக நடனக் கலைஞர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நடன நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், இந்தத் துயரச் செய்தி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

    Dancer collapses dancer dead Karur koil festival stage temple festival
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கைது செய்வதில் காட்டும் வேகத்தை சட்டம் ஒழுங்கில் காட்டலாம்”
    Next Article தவெக ஆட்சிக்கு எதிராக ரூ.180 கோடி சதி திட்டமா? விசாரணையில் பரபரப்பு தகவல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    July 3, 2026

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    July 3, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.