Close Menu
    What's Hot

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“கொஞ்சம் உங்க பக்கத்துல பாருங்க…” – கனிமொழிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
    அரசியல்

    “கொஞ்சம் உங்க பக்கத்துல பாருங்க…” – கனிமொழிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

    Editor web2By Editor web2July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 03 14h31m16s815
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும், தமிழக நலனில் எந்த சமரசமும் இருக்காது என்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம். இதுவரை சட்டமன்ற தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளோம்; இனியும் தமிழக மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்போம்” என்றார்.

    கர்நாடகாவில் மாநில நலன் தொடர்பான பிரச்சினைகளில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதைப் போல, தமிழகத்திலும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும், அதற்காக தமிழக பாஜக மத்திய அரசிடம் மாநிலத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    தவெக கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் இணைந்து வருவதால், அந்தக் கட்சிக்கு “வாஷிங் மெஷின்” தேவைப்படுகிறது என கனிமொழி தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், “அவர் தனது கட்சி நிகழ்ச்சியில் திரும்பிப் பார்த்தாலே உடன் இருப்பவர்கள் யார் என்பது தெரியும். அவர்களது கட்சிக்கும் வாஷிங் மெஷின் தேவைப்படும்” என்று பதிலடி கொடுத்தார்.

    மேலும், தன்னை கட்சி மாற பணம் கொடுத்து அணுகியதாக எம்.எல்.ஏ. ஒருவர் புகார் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அந்த புகார் குறித்து காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    congress Kanimozhi ManickamTagore Mekedatu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? திருமாவை வலியுறுத்தும் ஆதவ்; சமரசத்திற்கு வராத காங்கிரஸ்!
    Next Article 2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    July 3, 2026

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    July 3, 2026

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.