Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!
    Featured

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Editor web3By Editor web3July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijayabaskar agri krishnamurthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    கடந்த ஜூன் 16-ம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர். அவரது இந்த ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதோடு, விராலிமலை தொகுதி காலியானதாகவும் அரசிதழில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் த.வெ.க-வில் இணைந்தார்.

    இந்த நிலையில், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “விஜயபாஸ்கர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் ஏற்கனவே சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு நிலுவையில் உள்ள சூழலில், தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா செய்துள்ளார். அத்தகைய சூழலில், அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்டப்படி தவறானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், “விஜயபாஸ்கரின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் எந்தவித சட்டப்பூர்வமான பரிசீலனையும் செய்யாமல், இயந்திரத்தனமாக முடிவெடுத்துள்ளார். இது அரசியல் சாசன விதிகளுக்கும், இயற்கை நீதிக்கும் முரணானது” என்று அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    எனவே, விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், சபாநாயகரின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அதிமுக கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    AIADMK files C. Vijayabaskar resignation c.vijaybaskar case resignation issue Speaker's decision
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!
    Next Article இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.