Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
    தமிழ்நாடு

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    Editor web2By Editor web2July 3, 2026Updated:July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anitha Radhakrishnan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

    கடந்த ஜூன் 20 அன்று திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் நடைபெற்ற  கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி  அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து வந்தனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். “என்னைத் தவெக-வில் இணையச் சொல்லியும், அதற்காக எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியும் வற்புறுத்தினார்கள்.நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.  மிரட்டல்களுக்குப் பணியாததால் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை. நான் என்றும், எப்போதும் திமுக-வில்தான் இருப்பேன்” என்று அவர் ஆவேசமாக முழங்கினார். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தக் குற்றச்சாட்டு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    இந்த நிலையில், விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் சினிமா ஆக்ஷன் பாணியில் ‘போலீஸ் ராஜ்ஜியம்’ நடத்துவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    AnithaRadhakrishnanArrest cmvijay TamilNaduPolitics TVKvsDMK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!
    Next Article இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!
    Editor web2
    • Website

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.