தெலுங்கானா மாநிலம் கரிமா நகர் பகுதிய சேர்ந்தவங்க 55 வயதான லட்சுமி. கூலித் தொழிலாளியான இவங்க கடந்த 1-ம் தேதி வழக்கம் போல வேலைத் தேடி வீதி வீதியா போயிருக்காங்க. அப்போ அங்க வந்த இளைஞர் ஒருத்தரு, தன்னோட விவசாய நிலத்தில் வேலை இருப்பதாகக் கூறி, லட்சுமியை இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார்.
லட்சுமியின் கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நஸ்டுலாபூர் பகுதிக்கு அழைத்து சென்று, ஆள்நடமாட்டமற்ற விவசாய நிலத்தில் வைத்து லட்சுமி அணிந்திருந்த 5 கிராம் தாலி, கம்மல் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளார். அத்தோடு இது குறித்து வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, லட்சுமியை அங்கிருந்த ஆழமான கிணற்றில் தள்ளி விட்டுள்ளார்.
கிணற்றில் இருந்த கயிறை பிடித்துக் கொண்ட லட்சுமி மேலே வர முயன்றப் போது, அந்த கயிற்றை இளைஞர் அறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஜூலை 1 ம் தேதி காலை 10.30 மணிக்கு கிணற்றில் விழுந்த லட்சுமி, மறுநாள் காலை 7.30 மணி வரை கிணற்றுக்குள் மூழ்காமல் தத்தளித்தப் படியே இருந்துள்ளார்.
அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், லட்சுமியை பத்திரமாக மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
