செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ள காப்புக் காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் காப்புக் காடு முழுவதும் புகை சூழ்ந்தது.
விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை பரவியதால், தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி கடும் சிரமத்தை சந்தித்தனர்.
பரனூர் ரயில் நிலையம் மற்றும் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அடர்ந்த புகை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
