இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், “கேப்டன் கூல்” என ரசிகர்களால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மைதானத்தில் இருந்தாலும், அதற்கு வெளியே இருந்தாலும் உங்கள் அமைதி, தலைமைத்துவம் மற்றும் காலத்தால் மங்காத கவர்ச்சி கோடிக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. உங்களை மீண்டும் களத்தில் விளையாடக் காணும் எதிர்பார்ப்பு இன்றும் அதே அளவு உற்சாகத்துடன் உள்ளது.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், மேலும் பல ஆண்டுகள் வெற்றிகளைப் பெற்று வாழ வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
