Close Menu
    What's Hot

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்

    உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் – EPS நம்பிக்கைப் பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேற்கு வங்கத்தில் உடையும் TMC.. மம்தா vs அதிருப்தியாளர்கள்.. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மம்தா தரப்பு..!!
    Featured

    மேற்கு வங்கத்தில் உடையும் TMC.. மம்தா vs அதிருப்தியாளர்கள்.. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மம்தா தரப்பு..!!

    editor5By editor5July 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 27 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்விக்குப் பிறகு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் ஏற்பட்டுள்ள உடைப்பு கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மொத்தம் 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாக மாறி தனித்து செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், மாநில சட்டமன்ற சபாநாயகர் அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். இந்த அதிருப்திக் குழுவின் தலைவரான ரிதர்பா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதிருப்தியாளர்கள், மம்தா பானர்ஜி உருவாக்கி வளர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். முதலில் கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள், கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரம் தங்களுக்கே உரியது என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், தற்போதைய கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாக வாதிட்டுள்ளனர்.

    மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை பாஜகவின் மறைமுக சதி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். “தைரியம் இருந்தால் நேரடியாக பாஜகவில் சேர்ந்து என்னை எதிர்க்கட்டும்” என அதிருப்தியாளர்களுக்கு சவால் விட்டுள்ளார். ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கட்சியை முழுமையாக வளைத்துப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மம்தா தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளது. கட்சியின் அரசியலமைப்பின்படி அமைப்புக் குழுக்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை சுட்டிக்காட்டிய அவர்கள், 2022-ல் நடைபெற்ற அமைப்புத் தேர்தல்களுக்குப் பிறகு தற்போதைய நிர்வாகம் 2027 வரை செல்லுபடியாகும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், “கிளர்ச்சி தரப்பின் கூற்று உண்மையானால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் சின்னத்தையும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களையும் எவ்வாறு பயன்படுத்தினர்?” என மம்தா தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

    ஜூன் 22 அன்று அதிருப்தியாளர்கள் நடத்திய சிறப்பு மாநாடு கட்சி அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், அதன் முடிவுகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள், அமைப்புத் தேர்தல் ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கோரியுள்ளது. ஆனால் மம்தா தரப்பு, “அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே ஆணையத்திடம் உள்ளன” எனக் கூறி, ஆணையத்தின் செயல்பாட்டில் ஓரவஞ்சனை இருப்பதாக மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளது.

    ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உடைப்பு மேற்கு வங்காள அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் வலிமையான தலைமையில் உருவான கட்சி இப்போது உள்கட்சி மோதலால் பலவீனப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Mamata Banerjee West bengal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவுடனான நட்பு உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது..!! ஒரே போடாக போட்ட திருமாவளவன்..!!
    Next Article பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!! இந்தோனேசியாவின் உயரிய விருது அறிவிப்பு..!!
    editor5

    Related Posts

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    July 7, 2026

    உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் – EPS நம்பிக்கைப் பேச்சு

    July 7, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தீவிரம்..!! 2 கப்பல்களுக்கு குறி.. ஈரான் ஏவுகணை அட்டாக்..!!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்

    உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் – EPS நம்பிக்கைப் பேச்சு

    அடடே இப்படியும் மனிதர்களா? – குருவிக்காக ஸ்கூட்டி தியாகம்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தீவிரம்..!! 2 கப்பல்களுக்கு குறி.. ஈரான் ஏவுகணை அட்டாக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.