Close Menu
    What's Hot

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் – EPS நம்பிக்கைப் பேச்சு
    Featured

    உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் – EPS நம்பிக்கைப் பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,  நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும்; கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை  கூட்டம்  நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தினை ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமாரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணியும் கலந்து கொள்ளவில்லை.

    இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக ஆற்காடு தொகுதி எம்எல்ஏ  S.M சுகுமார் இருந்து வந்தார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கிய நிலையில் சுகுமார் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

    சுகுமாருக்கு பதில் சுமைதாங்கி ஏழுமலை என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள்

    எம்.எல்.ஏ.ரவி இருந்தார்.  அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டநிலையில் அவருக்கு பதில் லோகநாதன் என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரண்டு புதிய மாவட்ட செயலாளர்களும் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதே போல் திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான  கே.சி வீரமணி இருந்து வந்தார்.

    அவருடைய மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில், வீரமணிக்கு பதிலாக டாக்டர் பசுபதி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக எம்எல்ஏ S.M சுகுமாருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக எம்எல்ஏ கே.சி வீரமணிக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

    ஆனால் அந்த பதவிகளை ஏற்க முடியாது என இருவரும் மறுத்துவிட்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

    அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்து விட்டனர். இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்காது.

    உள்ளாட்சியை நல்லாட்சி என்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையாக விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டும் சீட் கொடுங்கள். பரிந்துரை செய்யுங்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து விடும்.

    AIADMK Edappadi K. Palaniswami EPS local body elections Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடடே இப்படியும் மனிதர்களா? – குருவிக்காக ஸ்கூட்டி தியாகம்!
    Next Article சேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்
    Editor TN Talks

    Related Posts

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    July 7, 2026

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    July 7, 2026

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    தர்மபுரி : பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..! காலில் விழுந்து அழுத பெற்றோர்..!

    இந்தியா – இந்தோனேசியா பாதுகாப்பு உறவில் புதிய அத்தியாயம்.. பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.