மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களின் பெயர் ஆக்கிரமிப்பின் அளவு மற்றும் முகவரியை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக மீட்டு பராமரிக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. வீரவசந்தராயர் மண்டப புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், அப்பணிகள் முடிந்தவுடன் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும். என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், “தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி எப்போது முழுமையடையும், பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடத்தை நவீன முறையில் அமைக்கும் வகையில் அது எப்போது வேறு இடத்திற்கு மாற்றப்படும்,?
கோயிலுக்கு சொந்தமான சொத்துக் களை ஆக்கிரமித்துள்ள வர்களின் பெயர், முகவரி விபரங்கள் அடங்கிய அறிக்கையை அறநிலை யத்துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத் தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
