Close Menu
    What's Hot

    ரயில் ஏசி கேபினா… ஹனிமூன் ஸ்வீட்டா? நெட்டிசன்கள் கிண்டல்

    கோடிக்கணக்கில் பணமோசடி?. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது FBI அதிரடி விசாரணை!

    FIFA UPDATE : தோல்வி எதிரொலி – குரோஷியா தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் ராஜினாமா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசு நெல் கிடங்கில் கோர தீ விபத்து!. ரூ.3.50 கோடி மதிப்பிலான நெல் மூட்டைகள் நாசம்!
    Featured

    அரசு நெல் கிடங்கில் கோர தீ விபத்து!. ரூ.3.50 கோடி மதிப்பிலான நெல் மூட்டைகள் நாசம்!

    Editor web3By Editor web3July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    paddy fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 6 லட்சம் நெல் மூட்டைகளில், எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் கருகிச் சேதமடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3.50 கோடி இருக்கும் என முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம், தென்காசி மற்றும் சுரண்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும், தீயின் வேகம் காரணமாக, இரவு முழுவதும் போராடியும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது, எஞ்சியிருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், மூட்டைகளின் உட்பகுதியிலிருந்து இன்னும் புகை வெளியேறி வருவதால், மீண்டும் தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.

    இந்தத் தீ விபத்து இயற்கையாக நடந்ததா அல்லது சமூக விரோதிகளின் செயலா என்பது குறித்து கடையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திறந்தவெளி கிடங்கில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முறையான விசாரணைக்குப் பின்னரே தீ விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    government paddy warehouse Massive fire paddy warehouse worth ₹3.50 crore destroyed
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா உலகக் கோப்பை 2026: ” மோசடி செய்கிறது அமெரிக்கா” – ஈரான் அதிபர் கடும் குற்றச்சாட்டு
    Next Article திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி; திருமாவுக்கு நோபல் பரிசு – வைகோ பேட்டி!
    Editor web3
    • Website

    Related Posts

    ரயில் ஏசி கேபினா… ஹனிமூன் ஸ்வீட்டா? நெட்டிசன்கள் கிண்டல்

    July 8, 2026

    கோடிக்கணக்கில் பணமோசடி?. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது FBI அதிரடி விசாரணை!

    July 8, 2026

    FIFA UPDATE : தோல்வி எதிரொலி – குரோஷியா தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் ராஜினாமா

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரயில் ஏசி கேபினா… ஹனிமூன் ஸ்வீட்டா? நெட்டிசன்கள் கிண்டல்

    கோடிக்கணக்கில் பணமோசடி?. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது FBI அதிரடி விசாரணை!

    FIFA UPDATE : தோல்வி எதிரொலி – குரோஷியா தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் ராஜினாமா

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.