Close Menu
    What's Hot

    ரேஷன் அரிசி விநியோகத்தில் புதிய நடைமுறை; பயனாளிகளுக்கு என்ன மாற்றம்..??

    போலீஸ் வலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்? தவெக ஆட்சி கவிழ்ப்பு சதியில் புதிய பரபரப்பு..!!

    தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர் விஜய் இன்று கரூர் பயணம்!  பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
    Featured

    முதலமைச்சர் விஜய் இன்று கரூர் பயணம்!  பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

    Editor web1By Editor web1July 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் சந்திப்பு, காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் பணி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் இன்று கரூர் செல்கிறார்.

    தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு முதல்முறையாக விஜய் செல்கிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் 32 வாரிசுதாரர்களுக்கு, முதலமைச்சர் விஜய் அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி பகுதியில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள தனியார் காலணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கரூர்- சேலம் புறவழிச்சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய் உரையாற்றுகிறார். 5 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்கள் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பொதுக்கூட்ட மைதானத்தில் க்யூஆர் கோடு அடிப்படையிலான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் (ADGP) டி.எஸ்.அன்பு தலைமையில், மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் மற்றும் கரூர் எஸ்பி ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கரூர் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    #CMJosephVijay‌ #Karur #TNGovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!
    Next Article 4-வது டி20: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!
    Editor web1
    • Website

    Related Posts

    ரேஷன் அரிசி விநியோகத்தில் புதிய நடைமுறை; பயனாளிகளுக்கு என்ன மாற்றம்..??

    July 10, 2026

    போலீஸ் வலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்? தவெக ஆட்சி கவிழ்ப்பு சதியில் புதிய பரபரப்பு..!!

    July 10, 2026

    தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..!!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரேஷன் அரிசி விநியோகத்தில் புதிய நடைமுறை; பயனாளிகளுக்கு என்ன மாற்றம்..??

    போலீஸ் வலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்? தவெக ஆட்சி கவிழ்ப்பு சதியில் புதிய பரபரப்பு..!!

    தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்.. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..!!

    10 மாதங்களுக்கு பிறகு.. கெத்தா மீண்டும் கரூர் வந்த விஜய்யின் பிரச்சாரம் வாகனம்..!!

    மக்கள்தொகை கணக்கெடுப்பு: அதிகாரிகள் இடமாற்றம் ஆக. 31 வரை தடை..!! அரசு அதிரடி உத்தரவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.