கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வந்த முதல்வருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, மூகாம்பிகை அம்மனை வழிபட்டார்.
தரிசனத்திற்குப் பிறகு கோயில் பிரசாதம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல்வரின் கோயில் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
பக்தர்களும் முதல்வரை நேரில் காண ஆர்வத்துடன் திரண்டனர்.
