Close Menu
    What's Hot

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!
    Featured

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் பதவிக்காலம் நிறைவடையும் போது, மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை சுமார் 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநில மாநாட்டில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்து அண்ணாமலை பேசினார்.

    தற்போது தமிழகத்தின் நேரடிக் கடன் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்புகளையும் சேர்த்தால் மொத்தக் கடன் சுமை 13.18 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் மொத்த வருவாயில் சுமார் 22.8% நிதி, வாங்கிய கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே செலவிடப்படுவதாகவும், இது மிகவும் அபாயகரமான நிதி நெருக்கடியைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது சராசரியாகத் தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடன் சுமை ஏறி நிற்பதாக அவர் கூறினார்.

    6 8

    தவெக அரசு இந்தாண்டு 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் சூழல் உருவாகும் என்றும் இந்த அரசின் ஆட்சிக் காலம் நிறைவடையும் போது தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து நிற்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அனுபவமற்றவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளதால், உடனடியாக தவெக அரசை விமர்சிக்காமல் குறிப்பிட்ட காலம் அவகாசம் தந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தவெக அரசுக்கு ஓராண்டுக்கு கோரிக்கைகளை மட்டுமே வைப்போம் என்றும் அதன்பிறகு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

    என் மண், என் மக்கள் தொழிற்சங்க பேரவை தொடங்கி உள்ளதாகவும், அதில் பலர் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்கு மரம் நடுதல், நதிகளை தூய்மைப்படுத்துதல் என 6 முக்கிய பிரச்சனைகளுக்கு களமாட உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

    ஜூலை 26ம் தேதி திருச்செந்தூரில் அடுத்த மாநாடு நடைபெற உள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார். பாஜகவின் பி டீம் என திமுகவுக்கு சந்தேகம் இருப்பதாகவும், திமுக செய்யும் அற்ப அரசியலை ஒருபோதும்தான் செய்யப்போவதில்லை என்றும் அவர்  தெரிவித்தார். சாதி மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும் என்று கூறிய அண்ணமாலை, மதத்தை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வெளியே வந்து அரசியல் செய்வோம் என்று கேட்டுக் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!
    Next Article விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!
    Editor web1
    • Website

    Related Posts

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    July 12, 2026

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    July 12, 2026

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மத்திய கிழக்கில் பதற்றம்: பஹ்ரைன், கத்தார், குவைத்தில் ஒலித்த அவசர எச்சரிக்கை சைரன்கள்!

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.