Close Menu
    What's Hot

    திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பவன் கல்யாண்: நேரில் நலம் விசாரித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
    Featured

    மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பவன் கல்யாண்: நேரில் நலம் விசாரித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

    Editor web1By Editor web1July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Andra DCM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆந்திரப்பிரதேசத் துணை முதலமைச்சர் பவன் கல்யாணை, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

    துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட தசைப் பாதிப்பு மற்றும் எலும்பு முறிவு காரணமாக, அவருக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஜூலை 11-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலின்படி, அறுவை சிகிச்சை எந்தவிதச் சிக்கலுமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பவன் கல்யாண் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் அவரது தோள்பட்டை செயல்பாடு முழுமையாகச் சீரடையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மும்பை சென்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பவன் கல்யாண் எப்போதும் மக்களுக்காக உழைப்பவர். மக்களைச் சந்திக்கும்போது தன்னை மறந்து தீவிரமாகச் செயல்படுவதால் அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பல நாட்களாக இந்த வலியால் அவதிப்பட்டு வந்தார். தற்போது நன்றாகக் குணமடைந்து வருகிறார்,” என்று தெரிவித்தார். 

    சந்திப்புக்கு முன்னதாக, தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்த சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் விரைவாகக் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமுத்திரக்கனி மட்டும் இளைஞர் ; நான் மட்டும் அப்பாவா? – நடிகர் சேத்தன் பொறுமல்
    Next Article சேத்தன் இன்னும் உயரம் தொடுவார் – நடிகர், இயக்குநர் சமுத்திரக் கனி
    Editor web1
    • Website

    Related Posts

    திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!

    July 13, 2026

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    July 13, 2026

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.