Close Menu
    What's Hot

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    “இரவல் ஆட்சி நடத்தும் விஜய்; இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” – இபிஎஸ் கடும் தாக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமெரிக்காவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று..! 31 மாநிலங்கள் பாதிப்பு என தகவல்..!
    Featured

    அமெரிக்காவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று..! 31 மாநிலங்கள் பாதிப்பு என தகவல்..!

    Editor web4By Editor web4July 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், அடுத்தடுத்து வெவ்வேறு நாடுகளில் புதிய தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் ’சைக்ளோஸ்போரியாசிஸ்’ என்ற கடுமையான குடல் சார்ந்த பாக்டீரியா/ ஒட்டுண்ணித் தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதுவரை நாட்டின் 31 மாநிலங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் 86-க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றால் மிச்சிகன் மாநிலம் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு மட்டுமே 1,562 வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக அங்கு ஆண்டுக்கு 40 முதல் 50 வழக்குகள் மட்டுமே பதிவாகும் நிலையில், இந்த திடீர் உயர்வு சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இது தவிர ஒஹாயோ, நியூயார்க், இல்லினாய்ஸ், டெக்சாஸ் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சைக்ளோஸ்போரியாசிஸ் என்றால் என்பது இது ‘சைக்ளோஸ்போரா’ என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் பரவும் ஒரு உணவுவழி நோயாகும். இதன் அறிகுறிகள்,

    * கடுமையான சோர்வு

    * கட்டுப்படுத்த முடியாத வயிற்றுப்போக்கு

    *வயிற்று வெடிப்பு, வாயுத் தொல்லை, குமட்டல்

    * பசியின்மை மற்றும் லேசான காய்ச்சல்

    இந்த ஒட்டுண்ணி ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாக சுவாசப் பாதை வழியாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ பரவாது. அசுத்தமான பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மூலமாக பரவுகிறது.

    அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகியவை இணைந்து இந்தத் தொற்றின் மூலத்தைக் கண்டறிய தீவிரமாக முயன்று வருகின்றன. எனினும், பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்தத் தொற்றுப் பரவல்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று சிடிசி தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பல நாட்களுக்கு முன்பு சாப்பிட்ட உணவுகளை நினைவுகூர்வதில் சிரமம் இருப்பதால், தொற்றுக்கான சரியான உணவுப் பொருளைக் கண்டறிவது சவாலாக உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாலை விபத்துகளை குறைக்க தனி செயல்திட்டம் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு
    Next Article முதலமைச்சரை கீழே அமுக்கப் பார்த்தார்கள் – ஆதவ் அர்ஜுனா  பகீர் தகவல்!
    Editor web4

    Related Posts

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    July 14, 2026

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    July 14, 2026

    “இரவல் ஆட்சி நடத்தும் விஜய்; இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” – இபிஎஸ் கடும் தாக்கு

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    “இரவல் ஆட்சி நடத்தும் விஜய்; இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” – இபிஎஸ் கடும் தாக்கு

    CM சார்..!! உங்க ஆட்டோகிராஃப் வேணும்..!! விருப்பப்பட்ட பெண் டாக்டரிடம் விஜய் கேட்ட கேள்வி..!!

    ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.