Close Menu
    What's Hot

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

    60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»வர்த்தகம்»AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்
    வர்த்தகம்

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    Editor web2By Editor web2July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amazon
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் (Cloud) உள்கட்டமைப்பை விரிவுபடுத்த கூடுதலாக 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.1 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த புதிய முதலீட்டின் மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் Amazon Web Services (AWS) தரவு மையங்கள் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு AI சிப்கள், கிளவுட் சேவைகள், AI கருவிகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.

    மேலும், இந்தியாவில் தனது இ-காமர்ஸ் மற்றும் க்விக் காமர்ஸ் சேவைகளையும் அமேசான் விரிவுபடுத்த உள்ளது. இந்த ஆண்டிலேயே 20-க்கும் மேற்பட்ட புதிய Fulfilment Centres மற்றும் 100-க்கும் மேற்பட்ட Last-mile Delivery Stations அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக டயர்-3 மற்றும் டயர்-4 நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    மேலும், ஊழியர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களின் நலனுக்காக ஏற்கெனவே அறிவித்த 300 மில்லியன் டாலர் முதலீட்டின் ஒரு பகுதி ‘சம்மான்’ (Sammaan) திட்டத்திற்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    2026 முதல் 2030 வரை இந்தியாவில் அமேசானின் மொத்த முதலீடு 48 பில்லியன் டாலராக உயரும். மேலும், 2010 முதல் 2030 வரை இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் மொத்த முதலீடு 88 பில்லியன் டாலரை தாண்டும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    AI amazon CloudComputing IndiaInvestment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்
    Next Article தொடர் உயர்வு..!! நாமக்கல் முட்டை விலை புதிய உச்சம்..!! அதிர்ச்சியில் முட்டை பிரியர்கள்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026

    60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!

    July 14, 2026

    மஞ்சள் விலை தொடர்ந்து உயர்வு..!! ஈரோடு விவசாயிகள் உற்சாகம்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

    60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!

    மஞ்சள் விலை தொடர்ந்து உயர்வு..!! ஈரோடு விவசாயிகள் உற்சாகம்..!!

    தொடர் உயர்வு..!! நாமக்கல் முட்டை விலை புதிய உச்சம்..!! அதிர்ச்சியில் முட்டை பிரியர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.