Close Menu
    What's Hot

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!
    தமிழ்நாடு

    அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

    Editor web2By Editor web2July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    poomani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாகித்திய அகாதெமி விருது பெற்ற புகழ்பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் பூமணி (79)  உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

    வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக மற்றும் தமிழ் இலக்கிய உலகப் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

    பூமணியின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னா், சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது தோட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    தமிழ் இலக்கிய உலகில் ஆழமான தடம் பதித்த பூமணியின் படைப்புகள் எளிய மக்களின் வாழ்க்கையையும் கரிசல் மண்ணின் எதார்த்தத்தையும் அப்படியே பிரதிபலித்தவை. இவரது ‘வெக்கை’, ‘பிறகு’, ‘வாய்க்கால் வரப்புகள்’, மற்றும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘அஞ்ஞாடி’ ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் என்றும் அழியாத புகழ்பெற்றவை. இதில் இவரது ‘வெக்கை’ நாவல் தான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படமாகப் பரிணமித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    எழுத்துலகில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறையிலும் தடம் பதித்த பூமணி, கடந்த 1997-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற ‘கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    arisalLiterature StateHonors TamilLiteraryIcon WriterPoomani
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!
    Next Article பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
    Editor web2
    • Website

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்!

    60 நாட்களில் 4 கஸ்டடி மரணங்கள்… இது அரசின் தோல்வி – விஜய் அரசை விமர்சித்த திமுக..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.