Close Menu
    What's Hot

    திருப்பத்தூர் : இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! கணவர் குடும்பத்தினர் கைது..!

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    2 நாட்களுக்குப் பின் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!
    Featured

    ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் பெற்ற தவெக ஊராட்சி மன்ற தலைவர்?- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

    Editor web1By Editor web1July 15, 2026Updated:July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 15 at 8.51.58 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில், நவீன் (24) என்ற ஒப்பந்ததாரர் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு முடித்துள்ளார். சாலை பணிகள் நிறைவடைந்த நிலையிலும், அதற்கான பில் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமியிடம் ஒப்பந்ததாரர் முறையிட்டபோது, பில் தொகையை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஒப்பந்ததாரர் நவீன் ஜி-பே (G-Pay) மூலமாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் இரண்டு முறைகளில் மொத்தம் ஒரு லட்சம் ரூபாயை ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுப்பியுள்ளார். மீதமுள்ள ரூ.30,000 பணத்தை நேரில் கொடுக்கும்போது, அதனைத் தனது கைபேசியில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

    “ஏற்கனவே ஆன்லைனில் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பிவிட்டேன், இப்போது மீதி 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டேன், தயவுசெய்து பில் பாஸ் செய்துவிடுங்கள்” என்று ஒப்பந்ததாரர் கூறுவதும், அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பணத்தைப் பெற்றுக் கொள்வதும் போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    WhatsApp Image 2026 07 15 at 8.51.58 AM

    கடந்த 2023 செப்டம்பரில், மாம்பாக்கம் ஊராட்சியில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக வார்டு உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், வீராசாமியின் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிக்கப்பட்டு, அவரது ‘செக் பவர்’ (காசோலை அதிகாரம்) ரத்து செய்யப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மீண்டும் அவர் ஊராட்சி மன்ற தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.

    இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை வீராசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடந்த மாதம் தன்னிடம் நவீன் ரூ.1.30 லட்சம் கடனாகப் பெற்றிருந்ததாகவும், அந்தப் பணத்தைத்தான் தற்போது ஆன்லைன் மூலமாக ஒரு லட்சமும், நேரில் 30 ஆயிரமும் திருப்பித் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, கடன் தொகையைத் திருப்பித் தரும்போது திட்டமிட்டு தவறாக வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பியுள்ளதாக வீராசாமி விளக்கமளித்துள்ளார்.

    தமிழகத்தில் லஞ்சமில்லாத ஆட்சி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தவெக பிரமுகர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி, இது லஞ்சப் பணமா அல்லது கைமாற்றாக வாங்கிய கடனா என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபண்ணைக்குள் புகுந்து அட்டகாசம்!. வெறிநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக்குஞ்சுகள் பலி!. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!
    Next Article உலகக்கோப்பை கனவு!. ஸ்பெயினுடன் மோதப் போவது யார்?. 24 ஆண்டுகளுக்கு பின் ஒரு வரலாற்று சந்திப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    திருப்பத்தூர் : இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! கணவர் குடும்பத்தினர் கைது..!

    July 15, 2026

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    July 15, 2026

    2 நாட்களுக்குப் பின் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பத்தூர் : இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! கணவர் குடும்பத்தினர் கைது..!

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    2 நாட்களுக்குப் பின் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240, வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு!

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள்: தமிழகத்தின் விடிவெள்ளியை நினைவுகூர்ந்து கல்வி வணக்கம்!

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்! ரஷிய விண்கலம் மூலம் வரலாற்றுப் பயணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.