Close Menu
    What's Hot

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”
    Featured

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    Editor web2By Editor web2July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அ|றிக்கையில், “அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை நாட்டின் அடையாளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

    1882ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ‘ஆனந்தமடம்’ புதினத்தின் மூலம் புகழ்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடல் நாட்டுப்பற்றை வலியுறுத்துவது எனக் கூறப்பட்டாலும், அப்பாடலில் இந்து மதத்தின் கடவுளர்களைப் பற்றிய வரிகள் இருப்பதால், எல்லா சமயத்தவரும் அதனை ஏற்க முடியாது என்பதைக் கருதியே, அப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்படாது தவிர்க்கப்பட்டது. அப்படியிருக்கையில், அதனை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கித் திணிப்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் கொடுஞ்செயலாகும்.

    கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, ‘ஜன கண மன’ எனும் பாடல் நாட்டுப்பண்ணாக இருக்கையில், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வலியத் திணித்துப் பாடக் கோருவது தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகும். ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் இத்தகைய எதேச்சதிகாரப்போக்கு நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட பதிவுசெய்யாது அமைதிகாப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ என்பதைக் கொள்கையாக அறிவித்துவிட்டு, மதச்சார்பின்மைக்கு ஒன்றிய அரசால் அச்சுறுத்தல் வரும்போது அதனை எதிர்க்காது முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.

    ஆகவே, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, ‘வந்தே மாதரம்’ எனும் மதச்சார்புக் கொண்டப் பாடலை அரசு நிகழ்வுகளில் கட்டாயமாக்கும் முடிவைப் பின்வாங்க வேண்டுமெனவும், அதனைச் செய்யக்கோரி தவெக அரசு எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

    NaamTamilarKatchi Secularism Seeman VandeMataram
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!
    Next Article பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!
    Editor web2
    • Website

    Related Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.