Close Menu
    What's Hot

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!
    Featured

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    Editor web2By Editor web2July 15, 2026Updated:July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MBBS students 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்  ஆகிய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை  மேலும் உயர்த்துவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம், நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நூற்றுக்கணக்கான ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளின் அரசு மருத்துவராகும் கனவு நனவாகியுள்ளது.

    இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டி ஏற்கனவே அரசுக்கு வழங்கியிருந்த பரிந்துரையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் என தெரிவித்திருந்தது. மேலும்  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இட ஒதுக்கீட்டின் சாதக பாதகங்களை ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டை மாற்றி அமைப்பது அல்லது அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது.

    தற்போதுள்ள விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 550-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) ஆகிய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை  10 சதவீதமாக உயர்த்துவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவ்வாறு இந்த இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தும் பட்சத்தில், ஆண்டுதோறும் பயனடையும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 800-ஆக அதிகரிக்கும். இதன் மூலம் மேலும் 250-க்கும் மேற்பட்ட தகுதியான மாணவர்களுக்குக் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்கப் பெறும்.

    நடப்பு 2026-27 கல்வியாண்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு (Medical Counselling) செயல்முறைகள் விரைவில் தொடங்கவுள்ள சூழலில், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) புதிய இட ஒதுக்கீட்டுப் பட்டியலின் (Seat Matrix) அடிப்படையில் இந்த 10% உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை அல்லது அறிவிப்பைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    7Point5To10Percent GovtSchoolStudents MBBS TNGovtMedicalReservation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!
    Next Article நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்
    Editor web2
    • Website

    Related Posts

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    July 15, 2026

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செமிகான் 2.0, மொபைல் உற்பத்தி உட்பட ₹2.19 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்! மத்திய அமைச்சரவை அதிரடி!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.