Close Menu
    What's Hot

    ராமர் கோயில் நன்கொடை முறைகேடு முதல்… நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்பவுள்ள 4 முக்கிய கேள்விகள்!

    ”மு.க. ஸ்டாலின் – இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி”

    குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மியான்மரில் அகதிகள் படகுகள் கவிழ்ந்த சோகம்; 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அச்சம்
    Featured

    மியான்மரில் அகதிகள் படகுகள் கவிழ்ந்த சோகம்; 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அச்சம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 myanmar A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மியான்மர் கடற்கரையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் (UNHCR) மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) கவலை தெரிவித்துள்ளன.

    இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற இரண்டு படகுகள் அண்மையில் மியான்மர் கடற்கரையில் கவிழ்ந்திருக்கலாம் என்ற தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஆரம்பகட்ட தகவலின்படி, ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ராகைன் மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு படகுகளும் புறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானோர் ரோஹிங்கியா அகதிகள் என்றும், சிலர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 250 பேரை ஏற்றிச் சென்ற முதல் படகு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. 280 பேருடன் சென்ற மற்றொரு படகு, ஜூலை 8-ஆம் தேதி மியான்மரின் அயேயார்வாடி (Ayeyarwady) கடற்கரை அருகே மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த இரண்டு படகுகளிலும் மொத்தம் 530-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.

    015 myanmar

    இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபரங்களை உறுதிப்படுத்தும் பணியில் இருப்பதாகவும் UNHCR தெரிவித்துள்ளது.

    இந்த விபத்து உறுதிப்படுத்தப்பட்டால், 2026-ஆம் ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் உயிரிழந்த அல்லது மாயமான ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டும் என ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் சுமார் 300 பேர் உயிரிழந்ததாக அல்லது மாயமானதாக பதிவாகியுள்ளது.

    மேலும், பாதுகாப்பான வாழ்க்கையை நாடி தப்பிச் செல்லும் மக்களின் துயரத்தை பயன்படுத்தி செயல்படும் மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களின் ஆபத்து தொடர்ந்து நீடிப்பதை இந்த சம்பவம் மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

    உயிரிழப்புகளைத் தடுக்க, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை வலுப்படுத்துதல், அகதிகளுக்கு பாதுகாப்பு மற்றும் புகலிடம் வழங்குதல், மனிதக் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஐ.நா. அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திலும் இனி ‘ரெஸ்டோ பார்’ முறை?. வருவாயை பெருக்க டாஸ்மாக் அதிரடி திட்டம்!
    Next Article ஹார்முஸ் நீரிணை கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிக்க தடை விதிப்பு..!! அதிரடி உத்தரவு..!!
    Editor TN Talks

    Related Posts

    ராமர் கோயில் நன்கொடை முறைகேடு முதல்… நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்பவுள்ள 4 முக்கிய கேள்விகள்!

    July 16, 2026

    ”மு.க. ஸ்டாலின் – இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி”

    July 16, 2026

    குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராமர் கோயில் நன்கொடை முறைகேடு முதல்… நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எழுப்பவுள்ள 4 முக்கிய கேள்விகள்!

    ”மு.க. ஸ்டாலின் – இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி”

    குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்

    ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – பணி விலகலைக் கட்டுப்படுத்த ஐ.எஸ்.ஆர்.ஓ நடவடிக்கை

    விழுந்தா வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு – ரூ.30 கோடி கேரள ஓணம்  பம்பர் லாட்டரி வெளியீடு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.