Close Menu
    What's Hot

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்
    Featured

    குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாடு… ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    021 mnsme
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     குறு , சிறு,  நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒருபடியாக எம்எஸ்எம்இ துறைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

    தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான நீண்டகால செயல் திட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

     இதற்காக தமிழக அரசின் MSME துறையின் கீழ் செயல்படும் FaMeTN அமைப்பு, தொழில்துறை ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்துதல், மின்னணு, தோல், ஜவுளி, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

    தொழில்துறைகளின் உற்பத்தித் திறனை உயர்த்துவது, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துவது, ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த  செயல் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உலகளாவிய போட்டிக்குத் தயார்படுத்தி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Micro Small and Medium Enterprises MSME MSME Development Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – பணி விலகலைக் கட்டுப்படுத்த ஐ.எஸ்.ஆர்.ஓ நடவடிக்கை
    Next Article ”மு.க. ஸ்டாலின் – இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி”
    Editor TN Talks

    Related Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    July 16, 2026

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.