Close Menu
    What's Hot

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்
    Featured

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 petrol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூரில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மற்றும் மேலாளரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுபோதையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல் ஒன்று  350 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை தராமல் பேசிக் கொண்டிருந்துள்ளது. இதனால் பெண் ஊழியர் பொன்மணி, பணத்தைக் கேட்டபோது தருகிறேன் எனக் கூறியவர்கள் இருசக்கரவாகனங்களில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் பொனமணி அவர்களை நிறுத்தி பணத்தைக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

    அப்போது போதை இளைஞர்கள் பணத்தை  தராமல், பொன்மணியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதோடு, அவரது கணவர் மோகன் ராஜ் மற்றும் தடுக்க வந்த மேலாளர் வினோத்குமார் ஆகியோரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    இதனால் காயமடைந்த பொன்மணி  மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில், பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செம்பனார்கோவில் போலீசார் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (21), திருமூர்த்தி (19), மேலப்பாதியை சேர்ந்த லிங்கராஜ் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்களான ஆதிஷ், சஞ்சய் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை திருச்சம்பள்ளியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் ஜெகதீசனை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்ட, நீதிபதி திருமூர்த்தி, லிங்கராஜ் ஆகிய இருவரையும் நீதிமன்ற பிணையில் விடுவித்தார். மேலும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரையும் மயிலாடுதுறையில் உள்ள  இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நாளை காலை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஹரிஹரசுதன் என்பவரை செம்பனார்கோவில்  போலீசார் தேடி வருகின்றனர்.

    பெட்ரோல் பங்கில் பெண் ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    assault case Mayiladuthurai Mayiladuthurai News Petrol Bunk Woman Employee
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?
    Next Article ஹார்முஸ் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம்!. மத்திய அரசு அதிரடி உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    July 17, 2026

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    July 17, 2026

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.