Close Menu
    What's Hot

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!
    Featured

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    editor5By editor5July 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 18 at 1.23.15 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.97.02 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறையின் நிலக்கீல் மற்றும் திண்காரை தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக் கட்டிடம் திறக்கப்பட்டது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்த விழாவில் பங்கேற்று, ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பாராட்டினார். முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து வருகிறார்.

    இந்திய அளவில் முதன்முறையாக, ஐந்தாண்டுத் திட்டம் போன்ற முறையில் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுத்துத் தந்துள்ளார். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, விரிவான முன்னேற்றத்தை உறுதி செய்கிறார். இவரது ஆட்சியை தமிழ்நாட்டின் பொற்காலம் என அழைக்கலாம் என்று புகழாரம் பாடினார்.உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு மிக எளிமையான முறையில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து வருவதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து கோட்டையில் அமர்ந்து மக்கள் பணிகளை ஆற்றி வருகிறார். வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் விரிவான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.எல் நினோ பாதிப்புகளை ஆராய இந்திய அளவில் புதிய முயற்சியை முதலமைச்சர் தொடங்கியுள்ளார். சிறந்த வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், வடகிழக்கு பருவமழை குறித்தும் தனிக் குழு ஆய்வு செய்கிறது.

    கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகளுடன் கலந்தாலோசித்து, மழைச் சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.பூரண மதுவிலக்கை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு, கோவில்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மக்கள் கோரிக்கையின் பேரில் அகற்றி வருகிறது. இது வரலாற்றுச் சாதனையாகும். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    அதிமுக சார்பில் எழுப்பப்பட்ட குதிரைப் பேரம் புகாருக்கு பதிலளித்த அமைச்சர், “41 எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் ஆகலாம் என்று அவர்கள் சொன்னாரா இல்லையா என்பதை அவர்களே நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டும். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் தெளிவுபடுத்திய பின்னரும் பதில் இல்லை. வட துருவமும் தென் துருவமும் இணையாதது போல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக ஒன்றிணைய முடியாது என்பதை இது காட்டுகிறது” என்றார்.

    பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்க முடியாது என்றும், திருமண ஏற்பாடுகள் போல் படிப்படியாக நடைபெறும் என்றும் விளக்கினார். தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ கடிதங்கள் வரும் போது முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

    Minister Sengottaiyan TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்னை நீக்க அதிகாரம் இல்லை.. தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பரபரப்பு பேட்டி..!!
    Next Article மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!
    editor5

    Related Posts

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    July 18, 2026

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    July 18, 2026

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    பிறந்தநாள் ;  தவெக தொண்டர்களுடன் கேக் வெட்டி அமைச்சர் புஸ்சி ஆனந்த் கொண்டாட்டம்

    கைலாசா பிரதிநிதிகளுடன் 3 தமிழக அமைச்சர்கள் சந்திப்பு? நித்யானந்தா பதிவு கிளப்பிய புதிய சர்ச்சை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.