Close Menu
    What's Hot

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்
    Featured

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 wilson A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உண்மை நிலை தெரியாததால், தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் சாடியுள்ளார்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக நிதி அமைச்சருமான  மரிய வில்சன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்தார்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  தமிழக முதல்வர் 15  – 16 நாட்கள் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் சுமார் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. நிறைய தகவல்களை பரிமாறி உள்ளோம். அமைச்சரவை கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்று தமிழக அரசின் முதல் பட்ஜெட் நல்லபடியாக தாக்கல் செய்யப்படும்.

    தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை .பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

    மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, திமுக தலைமைக்கும் தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.

    தமிழக முதல்வரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். 55 நாட்களில் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.  மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்கள் வரவேற்பது போன்று அனைவரும் வரவேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    004 wilson

    பின்னர் புகழ் பெற்ற பனிமய மாதா ஆலயத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் சென்றார். அங்கு பனிமய மாதா முன்பு முழந்தாளிட்டும், அமர்ந்தும்  உருக்கமாக வழிபாடு  செய்தவர்,  பின்னர் மாதாவிற்கு மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஜெபம் செய்தார்.

    Anitha Radhakrishnan maria wilson Tamil Nadu Politics Tamilaga Vettri Kazhagam TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!
    Next Article காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!
    Editor TN Talks

    Related Posts

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    July 18, 2026

    இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்

    July 18, 2026

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    6 மாதம்தான் தவெக ஆட்சி… திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – அனிதா ராதாகிருஷ்ணன் கணிப்பு

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.