Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!
    Featured

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    Editor web4By Editor web4July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ரூ.100கோடிக்கு மோசடி செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி விசாரணை ஒருபக்கம், திமுக நிர்வாகிகள் வீட்டில் சோதனை ஒருபக்கம் என விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எச்.ராஜாவை தொடர்புப்படுத்தி அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது என்னுடைய பெயரை இழுத்து விட்டு தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் அண்ணாமலை பேசி இருக்கிறார். அதில் கோவில் இடத்தை பராதீனப்படுத்தலாம் என்று நான் கூறியதாக கூறி இருக்கிறார்.

    இப்போதைய முதலமைச்சர் விஜய் அரசில் சபாநாயகர் சட்டசபையில் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். ஏன் குரானில் இருந்து தேவார பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டவில்லை? அப்படியானால் இந்த அரசு ஜனநாயக அரசு இல்லையா? இதை கண்டிக்க துணிச்சல் இல்லாத அரசியல் தலைவர்கள் எச்.ராஜா அப்படி பேசிவிட்டார் என்று நான் 2024-ல் பேசியதை தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசி இருக்கிறார்.

    நான் எடப்பாடி பழனிசாமியை 2 முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் நிலம், மனைகள், கட்டிடங்கள் அளக்கப்படவில்லை. கையகப்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி பேசி இருக்கிறேன். எந்த விதத்திலும் நான் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது கிடையாது.

    நான் கட்சி பணிக்காக சென்ற போது உள்ளூர் விவசாயிகள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்பவே நான் அவர்களிடம் சொன்னேன். கோவில் இடங்களை கையகப்படுத்த முடியாது. தி.மு.க. அரசு மக்களின் பட்டா இடங்களை கைப்பற்றுவதை அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தேன். முதலில் அது கோவில் சொத்தா? பட்டா இடமா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இதை தவறாக சுட்டிக்காட்டி என் பெயரையும் சேர்த்து இழுத்து விட்டு பொய் கூறி இருக்கிறார் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!
    Next Article தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்
    Editor web4

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.