தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்த் பிறந்தநாளை மாநிலம் முழுவதும் தவெகவினர் விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை கானத்தூரில் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் தினா என்கிற தினகரன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பங்கேற்று, தனது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடியதுடன், அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சரத் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
