Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்
    தமிழ்நாடு

    ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 cm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று (17.07.2026) ஒரு நாள் மட்டும் 16922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு  மூலம் தகவல்களை இணையதளத்தின் வாயிலாக  பதிவேற்றம் செய்துள்ளனர்.

    மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் நேற்று (17.07.2026) தொடங்கியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இது அமைகிறது.

    கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்து திட்டங்களையும் சரியாகத் திட்டமிடுவதற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தகவல்கள்தான் அடிப்படையாக அமைகின்றது.

    அதனால், ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் முதல்முறையாக, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.

    இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும். அதற்கு முன்பாக, 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை, முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக தாங்களே https://se.census.gov.in  என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கலாம்.

    தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.

    சென்னையில் நேற்று (17.07.2026) ஒரு நாள் மட்டும் 16922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

    எனவே, சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுயக் கணக்கெடுப்பிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Chennai corporation Greater Chennai Corporation Population Census 2026 self enumeration
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராயனுக்கு தேசிய விருதா? – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
    Next Article அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் – சிவகார்த்திகேயன் பெருமித வாழ்த்து!
    Editor TN Talks

    Related Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    July 18, 2026

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    July 18, 2026

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.