Close Menu
    What's Hot

    ‘தெருக்குரல்’ அறிவு கைது: இளைஞர்களை மிரட்டும் தமிழக அரசு –  உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    நாடாளுமன்றம் 2-வது நாளாக முடக்கம்!. நீட் விவகாரத்தால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    விழுப்புரம் : பள்ளிவாசலை உரிமை கொண்டாடிய அதிகாரிகள்..! அறிவிப்பு நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சூடுபிடிக்கும் நில மோசடி வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!
    Featured

    சூடுபிடிக்கும் நில மோசடி வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

    editor5By editor5July 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 28 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1-ல் ஆஜரானார். நீதிபதி பரத் குமார் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி பிரகாஷ் தனக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாகப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலம் குன்னம்பட்டி மற்றும் தொரணக்கல்பட்டி பகுதிகளில் அமைந்துள்ளது. சிபிசிஐடி (CB-CID) இந்த வழக்கை விரிவாக விசாரித்து வருகிறது.

    பிரகாஷின் புகாரின்பேரில், விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகள் சோபனா மீது அச்சுறுத்தல் மற்றும் கடத்தல் முயற்சி நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. பிரகாஷ் விஜயபாஸ்கருக்கு 10 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகவும், அதைத் திருப்பிக் கேட்டபோது தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடியில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உள்ளிட்டோர் தொடர்புபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    அவர்களது ஆதரவாளர்களான காஞ்சிபுரம் ரகு, ஈரோடு சித்தார்த்தன், கரூர் மரியப்பன், செல்வராஜ் உள்ளிட்டோர் பெயரில் போலியாக நிலம் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அசல் ஆவணங்கள் பிரகாஷிடம் இருந்த நிலையில், உண்மைகளை மறைத்து சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் மோசடி நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இன்றைய விசாரணையின்போது, அப்போதைய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    இந்த வழக்கில் ஏற்கனவே 17 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி அடுத்த விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். கரூர் மாவட்டத்தில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜயபாஸ்கர், அதிமுகவின் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். அதிமுக ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றிய இவர் மீதான இந்த வழக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    வழக்கின் முதல் புகாரை மேலா கரூர் சப்-ரெஜிஸ்ட்ரார் முகமது அப்துல் காதர் அளித்தார். அதன் அடிப்படையில் ஜூன் 9, 2024 அன்று கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஜூன் 22 அன்று வங்கல் போலீசாரும் தனி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

    land case mr vijayabaskar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதீவிரமடையும் போராட்டம்..!! ராஜினாமா செய்கிறாரா தர்மேந்திர பிரதான்..?? அமித்ஷாவுடன் முக்கிய மீட்டிங்..!!
    Next Article வாணியம்பாடி ; 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்… பதறவைக்கும் பகீர் சிசிடிவி காட்சி!
    editor5

    Related Posts

    ‘தெருக்குரல்’ அறிவு கைது: இளைஞர்களை மிரட்டும் தமிழக அரசு –  உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    July 21, 2026

    நாடாளுமன்றம் 2-வது நாளாக முடக்கம்!. நீட் விவகாரத்தால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    July 21, 2026

    விழுப்புரம் : பள்ளிவாசலை உரிமை கொண்டாடிய அதிகாரிகள்..! அறிவிப்பு நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘தெருக்குரல்’ அறிவு கைது: இளைஞர்களை மிரட்டும் தமிழக அரசு –  உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    நாடாளுமன்றம் 2-வது நாளாக முடக்கம்!. நீட் விவகாரத்தால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    விழுப்புரம் : பள்ளிவாசலை உரிமை கொண்டாடிய அதிகாரிகள்..! அறிவிப்பு நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு..!

    ”எல்லைக் கண்காணிப்பில் அலட்சியம்: கேரளக் கழிவுகளின் புகலிடமாக மாறும் தமிழகம்”

    பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு ; 5 பெண்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாகத் தேர்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.