திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள பஜனை கோவில் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் நான்கு வயது மகன் ரித்விக் இன்று வீட்டின் வெளியே வீதியில் விளையாடிக்கொண்டிருந்ததுள்ளார். அப்போது, அங்கு வீதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று குழந்தை ரித்விக்கின் கண், காது, கன்னம், கை, கால் என உடல் முழுவதும் கடித்து குதறியது.
இதனால், குழந்தை ரித்விக் அலறி துடித்த நிலையில், உடனடியாக குழந்தையை அவரது பெற்றோர் நாயிடம் இருந்து மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வீதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை, தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
