Close Menu
    What's Hot

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்… 4 முதல் 60 வயதினர் வரை செலுத்தலாம்!
    Featured

    இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்… 4 முதல் 60 வயதினர் வரை செலுத்தலாம்!

    Editor web2By Editor web2July 20, 2026Updated:July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dengue vacine
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் டெங்கு தடுப்புக்கான முதல் தடுப்பூசியாக ஜப்பானின் டகேடா பயோஃபார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் Qdenga தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இந்த தடுப்பூசி DENV-1, DENV-2, DENV-3, DENV-4 என டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமோ, தடுப்பூசி செலுத்துவதற்கு முன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையோ இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

    தோலுக்கு அடியில் (Subcutaneous) செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, 0.5 மில்லி அளவில் இரண்டு டோஸ்களாக, மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஆண்டுக்கு 5 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த Biological E நிறுவனத்துடன் டகேடா ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்திய சந்தையில் போட்டித்தன்மை கொண்ட விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    19 கட்ட மருத்துவ ஆய்வுகளில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட 12 மாதங்களுக்குப் பிறகு 80.2% செயல்திறன், டெங்கு காரணமான மருத்துவமனை அனுமதியைத் தடுக்க 90.4% செயல்திறன் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.5 ஆண்டுகளுக்குப் பிறகும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதில் 84.1% பாதுகாப்பு அளித்ததுடன், 7 ஆண்டுகள் வரை பாதுகாப்பு நீடிப்பதும் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    2022-ல் அறிமுகமான Qdenga தடுப்பூசிக்கு இதுவரை 43 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. உலகளவில் 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்தகுதி (Prequalification) வழங்கியுள்ளதால், சர்வதேச சுகாதார அமைப்புகள் மூலமாகவும் இந்த தடுப்பூசியை விநியோகிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளில் டெங்கு பாதிப்பு 11 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த தடுப்பூசி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

    DengueVaccine IndiaHealthcare PublicHealth Qdenga
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமின் கட்டண கூடுதல் வசூல் ஏற்க முடியாது.. பணத்தை திருப்பிக் கொடுங்க.. நயினார் கோரிக்கை..!!
    Next Article ஜப்பானுக்காக இனி காத்திருக்காது இந்தியா… புல்லட் ரயில் திட்டத்தில் புதிய பாதை!
    Editor web2
    • Website

    Related Posts

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    July 21, 2026

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    July 21, 2026

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.