Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”
    Featured

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    Editor web2By Editor web2July 21, 2026Updated:July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NEET symbol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை மட்டும் எதிர்ப்பதல்ல, நீட் தேர்வு முறையே முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின்  எக்ஸ்  பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.

    கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.

    மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    EducationPolicy NEET TVK Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகளம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?
    Next Article கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை
    Editor web2
    • Website

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.