Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை
    Featured

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    Editor web1By Editor web1July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் உள்ளிட்ட தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் நிகழ்ந்த தடியடி சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கலைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறை தடியடி நடத்தியதிலும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதிலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் லேடி ஹார்டிஞ்ச் மற்றும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    காவல்துறையின் இந்த அத்துமீறல் மற்றும் தீவிர நடவடிக்கை குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு முன்பாக வழக்கறிஞர் தரப்பில் முறையிடப்பட்டு, வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை இதில் இழுக்க வேண்டாம்; இந்த மனு வழக்கமான நடைமுறைப்படி நாளைய தினம் விசாரணைக்கு வரும், எனக் கூறி, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டனர்.

    அதேவேளையில், போராட்டத்தின் போது வன்முறை, கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”
    Next Article சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!
    Editor web1
    • Website

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.