Close Menu
    What's Hot

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!
    Featured

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    Editor web3By Editor web3July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Breakfast Scheme
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ கீழ் உணவு தயாரித்து வழங்குபவர்களைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கோரியுள்ளது.

    3 மாநகராட்சிகள் மற்றும் 112 நகராட்சிகளில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் மூன்று ஆண்டுகளுக்குக் காலை உணவு வழங்கப்படவுள்ளது.

    இதற்குத் தகுதி வாய்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், நகர அல்லது பகுதி வாரியான குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய சேவை குழுக்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு பணியின் மதிப்பு ரூ. 37 லட்சம் மற்றும் அதிகபட்சப் பணியின் மதிப்பு ரூ. 9.20 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை http://www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 27ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முன் கலந்தாய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11.00 மணியளவில் அந்தந்த மாநகராட்சி அல்லது நகராட்சி வளாகத்தில் நடைபெறும்.

    ஒப்பந்தப்புள்ளிகளைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கக் கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 14ம் தேதிமாலை 3 மணி வரை ஆகும். அதன்பிறகு அதே நாள் மாலை 03.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

    kaalai unavu thittam Municipal Administration Department Perunthalaivar Kamarajar tender notification
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வில் வினாத்தாள் கசிந்தது!. ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!
    Next Article முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸ்!. தியேட்டரில் செல்ஃபி எடுத்து VIBE செய்த அமைச்சர்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    July 23, 2026

    ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??

    July 23, 2026

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    போராடும் இளைஞர்களை கிண்டலடித்த விவகாரம்.. பெண் அதிரடிப்படை அதிகாரி மீது விமர்சன அலை..!!

    நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு!. பிரதமர் மோடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.