Close Menu
    What's Hot

    அறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!

    நீட் எதிர்ப்பு போராட்டம்!. லயோலா மாணவர்கள் உள்ளிருப்பு; சாஸ்திரி பவன் முன்பு மே 17 இயக்கம் முற்றுகை!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சூடுபிடிக்கும் குதிரை பேரம் வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி..!!
    Featured

    சூடுபிடிக்கும் குதிரை பேரம் வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி..!!

    editor5By editor5July 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவுடன் குதிரை பேரம் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். சுமார் ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி, உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை முன்ஜாமின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் சூரிட்டி வழங்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    கடந்த 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. விசாரணை அதிகாரி முன்பு தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. முன்ஜாமின் கிடைத்த பின்னரும் செந்தில்பாலாஜி தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமின் உத்தரவை செயல்படுத்த அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், வழக்கு தொடர்பான விசாரணையின்போது தங்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது எனக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக இருப்பதாகவும், ஆனால் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு கணக்கு தீர்க்க வேண்டியுள்ளது” எனக் கூறியதைச் சுட்டிக்காட்டி, அரசியல் பழிவாங்கல் நோக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், புலன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும், சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் கிடைத்த பின்னரும் கீழமை நீதிமன்றத்தில் சரணடையாத நிலையில் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து செந்தில்பாலாஜி வழக்கறிஞர்கள் உடன் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நேரில் வந்து ஆஜராகி, சூரிட்டி வழங்கும் நடைமுறையை முடித்தார்.

    இந்த வழக்கு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுடன் தொடர்புடைய எம்எல்ஏவை அணுகி ஆதரவு தேடியதாக கூறப்படும் புகார், எதிர்கால அரசியல் கூட்டணி மாற்றங்கள் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. செந்தில்பாலாஜியின் ஆஜர் மற்றும் முன்ஜாமின் நிறைவேற்றம் அவரது சட்டப்போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    Horse Trading Case Senthil Balaji
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட்..!! மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் இடம்பிடிக்குமா?
    Next Article வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! 1,200 பேர் மீட்பு.. 22 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!
    editor5

    Related Posts

    அறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!

    July 24, 2026

    நீட் எதிர்ப்பு போராட்டம்!. லயோலா மாணவர்கள் உள்ளிருப்பு; சாஸ்திரி பவன் முன்பு மே 17 இயக்கம் முற்றுகை!

    July 24, 2026

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!

    நீட் எதிர்ப்பு போராட்டம்!. லயோலா மாணவர்கள் உள்ளிருப்பு; சாஸ்திரி பவன் முன்பு மே 17 இயக்கம் முற்றுகை!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்..!! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! 1,200 பேர் மீட்பு.. 22 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.