Close Menu
    What's Hot

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“இது லட்சக்கணக்கான மாணவர்களின் வெற்றி; என்னை ஹீரோ ஆக்க வேண்டாம்!”- அபிஜீத் தீப்கே!
    Featured

    “இது லட்சக்கணக்கான மாணவர்களின் வெற்றி; என்னை ஹீரோ ஆக்க வேண்டாம்!”- அபிஜீத் தீப்கே!

    Editor web1By Editor web1July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லட்சக்கணக்கான மாணவர்களின் போராட்டத்தால் வெற்றி கிடைத்துள்ளதால், என்னை யாரும் ஹீரோவாக சித்தரிக்க வேண்டாம் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘போராட்டத்தை வெற்றி பெற வைத்து நாட்டின் புதிய ஹீரோவாக அவதரித்துள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அபிஜீத் தீப்கே, தயவுசெய்து என்னை தனிப்பட்ட முறையில் ஹீரோவாக ஆக்க முயற்சிக்காதீர்கள். இந்த நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் ஒரு தனிநபரை ‘ஹீரோ’வாக உயர்த்திப் பிடித்ததன் விளைவைத்தான் இன்று வரை இந்த நாடே அனுபவித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

    “இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல. கடந்த சில நாட்களாக வீதியில் இறங்கி போராடிய லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அடைந்த வெற்றி என்று அவர் குறிப்பிட்டார்.

    “கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பது எங்களது போராட்டத்தின் முதற்கட்ட நகர்வு மட்டுமே. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இழப்பீடு, வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட எங்களின் மற்ற பிரதான கோரிக்கைகள் நிறைவேறும் வரை அறப்போராட்டம் ஓயாது” என்றும் அபிஜித் தெரிவித்துள்ளார்.

    #AbhijeetDipke #CJP #NEETPaperLeak #DharmendraPradhanResign #DelhiProtest #TNTalks
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நாட்டுக்கான பணி மகத்தானது!”- தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து பாஜக தலைவர்கள் புகழாரம்!
    Next Article பிரான்ஸ், ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத்தீ: 15 பேர் பலி; 2.70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!
    Editor web1
    • Website

    Related Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    July 26, 2026

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    July 26, 2026

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.