Close Menu
    What's Hot

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!. 2 தொழிலாளர்கள் பலி; ஒருவர் படுகாயம்!

    காமன்வெல்த் வரலாற்றில் புதிய மைல்கல்: 19-வது பதக்கம் வென்று தென் ஆப்பிரிக்க   வீரர் சாதனை!

    இளையோர் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை 7-3 என வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»18 வயதில் வரலாறு!. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை!
    விளையாட்டு

    18 வயதில் வரலாறு!. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை!

    Editor web3By Editor web3July 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anahat Singh creates history
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவின் ஸ்குவாஷ் துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், இளம் வீராங்கனை அனாஹத் சிங் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், எகிப்து நாட்டின் ருக்கையா சலேமை (Ruqayya Salem) வீழ்த்தி 18 வயதான அனாஹத் சிங் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். இதன் மூலம் இத்தொடரில் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்த எகிப்தின் ஆதிக்கத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    தொடரில் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்கிய அனாஹத் சிங், இறுதிப் போட்டியில் மிகுந்த கவனத்துடனும் நிதானமாகவும் விளையாடி ருக்கையா சலேமை வீழ்த்தினார். பெண்களுக்கான இந்தப் போட்டியில் கடந்த 13 ஆண்டுகளாக எகிப்து நாடே கோப்பையை வென்று வந்த நிலையில், அந்தச் சாதனையைத் தகர்த்து அனாஹத் சிங் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இந்திய ஸ்குவாஷ் வரலாட்டின் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் முதல் இந்திய  வீராங்கனை என்ற பெருமையை அனாஹத் சிங் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய வீரர்கள் பதிவு செய்த சிறந்த பல சாதனைகளை முறியடித்துள்ள இவரது இந்த வெற்றி, இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    அனாஹத் சிங் யார்? கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 13 அன்று டெல்லியில் பிறந்த அனாஹத் சிங், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பிரகாசமான விளையாட்டுத் திறமைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். டெல்லியில் உள்ள தி பிரிட்டிஷ் பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2023-ஆம் ஆண்டில் தொழில்முறை வீராங்கனையாக மாறினார். இந்தியாவின் முன்னாள் ஸ்குவாஷ் நட்சத்திரம் சௌரவ் கோஷல், ஸ்டீபன் காலிஃபி மற்றும் கிரிகோரி கால்டியர் ஆகியோரிடம் இவர் பயிற்சி பெற்றுள்ளார்.

    இளம் வயது என்றாலும், இவரது விளையாட்டுப் பயணம் பல சாதனைகளைக் கொண்டுள்ளது. அந்தவகையில் 2025 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம், பல ஆசிய சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்கள், PSA ஆண்டின் சிறந்த இளம் வீராங்கனை விருது (2025), ஆண்டின் சிறந்த சலஞ்சர் வீராங்கனை விருது (2025), பிப்ரவரி 2026-ல் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தைப் பிடித்தது (Career-high ranking) உள்ளிட்ட பல சாதனைகளை புரிந்துள்ளார்.

    இந்திய ஸ்குவாஷ் வரலாற்றில் தனது வயதிற்கு மீறிய பல சாதனைகளை அனாஹத் தொடர்ந்து படைத்து வருகிறார். டீன் ஏஜ் பருவத்திலேயே காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்; பல PSA டூர் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளதுடன், உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இளைய இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகின் முதல் 20 தரவரிசைப் பட்டியலிலும் இவர் இடம்பிடித்தார்.

    வரவிருக்கும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டு அறிமுகமாகவுள்ள நிலையில், அனாஹத் சிங்கின் இந்தச் சாதனை இந்தியாவின் மிக முக்கிய ஒலிபிக் பதக்க எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இவரின் பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    Anahat Singh Creates History first Indian to win World Junior Squash Championship
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயார் இந்த பிரஹலாத் ஜோஷி!. அவரது கல்வித் தகுதி என்ன?. புதிய கல்வி அமைச்சர் குறித்த முழு விவரங்கள்!
    Next Article குப்பை குவியலான போராட்ட களம்!. ஜந்தர் மந்தர் பகுதியை சுத்தப்படுத்த 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் குவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!. 2 தொழிலாளர்கள் பலி; ஒருவர் படுகாயம்!

    July 26, 2026

    காமன்வெல்த் வரலாற்றில் புதிய மைல்கல்: 19-வது பதக்கம் வென்று தென் ஆப்பிரிக்க   வீரர் சாதனை!

    July 26, 2026

    இளையோர் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை 7-3 என வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!. 2 தொழிலாளர்கள் பலி; ஒருவர் படுகாயம்!

    காமன்வெல்த் வரலாற்றில் புதிய மைல்கல்: 19-வது பதக்கம் வென்று தென் ஆப்பிரிக்க   வீரர் சாதனை!

    இளையோர் ஆசிய ஹாக்கி: பாகிஸ்தானை 7-3 என வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

    தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்கிறேன்… கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் – நிர்மல்குமார்

    கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: 8 அலுவலர்கள் சஸ்பெண்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.