Close Menu
    What's Hot

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!
    தமிழ்நாடு

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    Editor web1By Editor web1July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் உள்ள இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

    உலகப் புகழ்பெற்ற அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று, சுவாமியையும், அம்பாளையும் தரிசித்து செல்கின்றனர்.

    இந்தநிலையில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த மணிக்குமார் என்ற பக்தர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ‘இடுக்கு பிள்ளையார்’ கோயிலுக்குச் சென்ற மணிக்குமார், வழக்கப்படி இடுக்கின் வழியே நுழைந்து சென்று பிள்ளையாரை தரிசனம் செய்ய முயன்றார். அப்போது, அவரது உடல் பருமன் காரணமாக இடுக்கில் இருந்து வெளியே வர முடியாமல் பாதியிலேயே சிக்கிக் கொண்டார்.

    நீண்ட நேரமாக வெளியே வர முடியாமல் தவித்த அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, உடன் வந்தவர்களும் அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!
    Next Article காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!
    Editor web1
    • Website

    Related Posts

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    July 26, 2026

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    July 26, 2026

    சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வு சீர்திருத்தங்களுக்காக உயர்நிலைக் குழு அமைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி- சாய் பல்லவி நடிக்கும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்!

    “தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்!” – பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் உருக்கம்

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.