Close Menu
    What's Hot

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆக.1 முதல் தட்கல் டிக்கெட்டுக்கு டோக்கன் முறை.. பயணிகள் நெரிசலை குறைக்க ரயில்வே அதிரடி!
    Featured

    ஆக.1 முதல் தட்கல் டிக்கெட்டுக்கு டோக்கன் முறை.. பயணிகள் நெரிசலை குறைக்க ரயில்வே அதிரடி!

    editor5By editor5July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 43 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய ரயில்வே பயணிகளின் நீண்டகால குறைபாட்டுக்கு தீர்வு காணும் வகையில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவில் புதிய டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய அமைப்பு, முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகள் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன. பல நேரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் டோக்கன் முறையின் கீழ், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படும்.

    இந்த டோக்கனில் உள்ள வரிசை எண்ணின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒழுங்கான முறையில் டிக்கெட் பதிவு செய்யப்படும். இதனால் கவுண்டர் அருகே ஏற்படும் அவசரமும், தள்ளுமுள்ளும் கணிசமாகக் குறையும் என ரெயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய முறையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்பதிவு மையத்திற்கு வரும் பயணிகள் சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆதார் அட்டை அல்லது வேறு செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை) கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பெயர், வயது, பாலினம், இருக்கை விருப்பம் உள்ளிட்ட முழு விவரங்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருப்பது நல்லது. இது முன்பதிவு செயல்முறையை வேகப்படுத்தி, பிற பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இந்தப் புதிய டோக்கன் முறை வெற்றிகரமாக அமைந்தால், படிப்படியாக நாடு முழுவதும் உள்ள பிற ரெயில்வே மண்டலங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தட்கல் டிக்கெட் முன்பதிவில் நேர்மை, ஒழுங்கு மற்றும் வசதியை உறுதி செய்யும் இந்த நடவடிக்கை பயணிகளிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதே எங்கள் நோக்கம். இந்த முறை சீராகச் செயல்படுத்தப்பட்டால், முன்பதிவு மையங்கள் இனி அமைதியான மற்றும் ஒழுங்கான இடங்களாக மாறும்” என்றனர்.

    Indian Railways tatkal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டது…. ஆதாரங்களுடன் தவெக அறிக்கை
    Next Article ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    editor5

    Related Posts

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    July 29, 2026

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.