Close Menu
    What's Hot

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?
    Featured

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 adithya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான 24 மணி நேர தமிழ் நகைச்சுவை தொலைக்காட்சி சேனல் ஆதித்யா டிவி ஆகும். இது நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படக் காமெடி காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா டிவி சேனலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரை இழிவுபடுத்தும் வகையில் ஆதித்யா டி.வியில் சித்தரிக்கப்பட்டதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான அவரது அறிக்கையில்…

    விடுதலைப் போராட்ட வீரர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் வ.உ.சிதம்பரனார். இதனால் அவர் “கப்பலோட்டிய தமிழன்” என்ற பெயரைப் பெற்றார். சிறையில் செக்கிழுத்தது உட்பட பல அடக்குமுறைகளைச் சந்தித்தவர். எனவே, தமிழக மக்களால் “செக்கிழுத்த செம்மல்” என்று போற்றப்படுபவர்.

    ஆதித்யா டி.வி சேனல் நகைச்சவை நிகழ்ச்சி என்ற பெயரில் வ. உ. சி. போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்தது கண்டனத்திற்குரியது. ஆதித்யா டி.வி நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி தயாரப்பாளர்கள் இதற்குப் பொறுப்பேற்று தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    தேசபக்தர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை கண்ணியமான முறையில் ஊடகங்கள் முன்வைக்கவேண்டும் என  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    CPI Media Controversy Political News Sun Network Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!
    Next Article மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!
    Editor TN Talks

    Related Posts

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    July 29, 2026

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    July 29, 2026

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?

    ஆற்காட்டில் பட்டப்பகலில் பயங்கரம்… தந்தை-மகனை விரட்டிச் சென்று சரமாரி வெட்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.