Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!
    விளையாட்டு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Indian Boxers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் தொடர் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.

    குறிப்பாகக் குத்துச்சண்டைப் பிரிவில் இன்று ஒரே நாளில் 5 பேர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். ஆடவருக்கான 90 கிலோவுக்கு அதிகமானோர் பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால் அபாரமாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அவரைத் தவிர சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச் மற்றும் அங்குஷ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறும் வீராங்கனைகளுக்குக் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி என்பதால், இந்தப் பிரிவில் மட்டும் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

    தற்போது வரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பளுதூக்குதலில் மட்டும் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

    அதேபோல், அத்லெடிக்ஸ் மற்றும் பாரா அத்லெடிக்ஸ் பிரிவில் ஷர்மிலா தங்கம் வென்றதன் மூலம் 4 பதக்கங்களும், பாரா பவர்லிஃப்டிங்கில் 1 வெண்கலமும் கிடைத்துள்ளன. மேலும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அனிமேஷ் குஜுரும், குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் மற்றும் சமர்தீப் சிங்கும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி இந்தியாவிற்குப் பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளனர். பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், கனடா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

    Boxing CWG2026 MirabaiChanu TeamIndia
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”
    Next Article பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு
    Editor web2
    • Website

    Related Posts

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    July 29, 2026

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    July 29, 2026

    காமன்வெல்த் அரங்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியல்..!! யார் என்ன வென்றார்கள்?

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.