Close Menu
    What's Hot

    விஜய் பெங்களூரு வந்தால் இதுதான் நடக்கும்.. வாட்டாள் நாகராஜ் பரபரப்பு அறிவிப்பு!

    இனி இந்த டைமில் தான் தரிசனம்.. திருச்செந்தூர் கோவிலில் புது ரூல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!

    கோவை : ’பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்திடுக’..! விவசாயிகள் போராட்டம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
    Featured

    முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

    Editor web2By Editor web2July 31, 2026Updated:July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 31 11h44m19s502
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லவிருக்கும் தமிழக முதல்வர் விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய பெ. சண்முகம், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா செல்லும் முடிவை கடுமையாக விமர்சித்தார்.

    காவிரி விவகாரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் நிலையில், கர்நாடகாவுடன் தனியாக இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பலவீனப்படுத்தும் என்று தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தை என்ற பெயரில் கர்நாடகா செல்வது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் எடுத்துள்ள சட்டப்பூர்வ நிலைப்பாட்டை தளர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது.

    மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அந்த நிலைப்பாட்டை தமிழக அரசு தொடர்ந்து உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
    அதே நேரத்தில், தமிழ்நாட்டுக்கான காவிரி நீரைப் பெறுவதில் எந்த தயக்கமும் இருக்கக் கூடாது. கர்நாடகாவிடம் இருந்து நீரைப் பெற சட்டரீதியான வழிமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுவது சிறந்தது.

    எனவே, கர்நாடகா பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் கைவிட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் சட்ட வழிகளின் மூலமும் காவிரி உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

    CauveryIssue cmvijay cpm KarnatakaVisit
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீலகிரியில் கடும் குளிர்..!! நடுங்கும் மக்கள்..!! ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!
    Next Article மாற்றப்படுகிறதா தாயுமானவர் திட்டம் பெயர்..?? அடுத்த அதிரடியில் இறங்கும் தவெக அரசு..!!
    Editor web2
    • Website

    Related Posts

    இனி இந்த டைமில் தான் தரிசனம்.. திருச்செந்தூர் கோவிலில் புது ரூல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!

    July 31, 2026

    கோவை : ’பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்திடுக’..! விவசாயிகள் போராட்டம்..!

    July 31, 2026

    மின் கட்டண வீடியோ வைரல்… விஜே சித்து விவகாரத்தை கையில் எடுத்த திமுக!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் பெங்களூரு வந்தால் இதுதான் நடக்கும்.. வாட்டாள் நாகராஜ் பரபரப்பு அறிவிப்பு!

    இனி இந்த டைமில் தான் தரிசனம்.. திருச்செந்தூர் கோவிலில் புது ரூல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!

    கோவை : ’பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்திடுக’..! விவசாயிகள் போராட்டம்..!

    மின் கட்டண வீடியோ வைரல்… விஜே சித்து விவகாரத்தை கையில் எடுத்த திமுக!

    காவிரி நீர்திறப்பு விவகாரம்!. கர்நாடகாவில் தீவிரமடையும் போராட்டம்!. மாநிலம் தழுவிய பந்த்துக்கு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.