Close Menu
    What's Hot

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி
    Featured

    ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி

    Editor web2By Editor web2July 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கும் நிலையில், பேச்சுவார்த்தைக்காக முதலமைச்சர்  விஜய் கர்நாடகா செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற  காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட பிறகும் கூட  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது.

    இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே  தீருவேன் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பது தமிழகத்திற்கு நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

    காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது  என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கின்றன.  கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும்  இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது  என்பதற்காகத் தான் கர்நாடக அரசும்,  கன்னட இயக்கங்களும் இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு  ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது அங்கு சென்று பேச்சு நடத்தி முதலமைச்சர் விஜய் அவர்கள் எதை சாதிக்கப் போகிறார்? அவரது பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள்  தான் தாரைவார்க்கப்படும். இந்த  தவறை முதலமைச்சர் விஜய் செய்யக் கூடாது.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணை தடுக்கப்பட வேண்டும்; இவை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த பேச்சுகளையும் தமிழ்நாடு  நடத்தக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் நிலைப்பாடு ஆகும். இதற்கு எதிராக எந்த முடிவையும் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளக் கூடாது. எனவே, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர்  விஜய் அவர்கள் கைவிட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

    AnbumaniRamadoss CauveryDispute cmvijay TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?
    Next Article காவிரி நீர்திறப்பு விவகாரம்!. கர்நாடகாவில் தீவிரமடையும் போராட்டம்!. மாநிலம் தழுவிய பந்த்துக்கு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை!
    Editor web2
    • Website

    Related Posts

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    July 31, 2026

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    July 31, 2026

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    பாஜகவில் திடீர் திருப்பம்.. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பதவி விலகல்..!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.