சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். தினசரி 1000 முதல் 1100 டன் அளவிலான காய்கறிகள் வழக்கமாக விற்பனைக்கு கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படும் வரப்படுகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் தேதி மற்றும் ஆடி மூன்றாவது வாரம் என்பதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் கூடுதலாக காய்கறிகளை வாங்கிய நிலையில் சந்தையில் காய்கறிகளின் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் இன்று 70 முதல் 50 ரூபாய் வரையும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 70 முதல் 60 ரூபாய்க்கும், அனைத்து பச்சை காய்கறிகளின் விளையும் கிலோவிற்கு 20 முதல் 30 ரூபாய் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்றைய காய்கறி நிலவரப்படி,
*வெங்காயம்* 35/30
– (கர்நாடகா வெங்காயம் 25/20
– *தக்காளி*: 12/8/5 (நவீன தக்காளி 30)
– *உருளை*: 25/20/15
– *சின்ன வெங்காயம்*: 75/70/60
கேரட்*: ஊட்டி 70/60/50
– மலூர் 45/40
– *பீன்ஸ்*: 70/60/50
– *பீட்ரூட்*: ஊட்டி 50/40
– கர்நாடக 30/25
– *சவ் சவ்*: 30/25
– *முள்ளங்கி*: 35/30
– *முட்டை கோஸ்*: 30/25
– *வெண்டைக்காய்*: 30/25
– *கத்திரிக்காய்*: உஜாலா 40/30
– வரி கத்திரிக்காய் 30/25
– *காராமணி*: 40/30
– *பாவக்காய்*: 50/40
– *புடலங்காய்*: 30/20
– *சுரக்காய்*: 25/15
– *சேனைக்கிழங்கு*: 50/40
– *முருங்ககாய்*: /30/20
– *சேமகிழங்கு*: 20/15
– *காலிபிளவர்*: 40/25
– வெள்ளரிக்காய்25
– *மிளகாய்*: 30
– *பச்சை மிளகாய்*: 70/60
– *பட்டாணி*: 150/145
*இஞ்சி*:190/180/100
– *பூண்டு*: 250/160/130
– *அவரைக்காய்*: 60/50
– *மஞ்சள் பூசணி*: 25/20
– *வெள்ளை பூசனி*: 25
– *பீர்க்கங்காய்*: 50/40
-எலுமிச்சை*:150/130
– *நூக்கள்*: 40/30
– *கோவைக்காய்*: 30/20
*கொத்தவரங்காய்*: 30/25
– *வாழைக்காய்*: 18/15
– வாழைதண்டு, மரம்*: 35/30
– *வாழைப்பூ*: 30/20
– *குடைமிளகாய்*: 50/40
– *வண்ண குடமிளகாய்*:160
– *கொத்தமல்லி*: 8
– *புதினா*: 6
– *கருவேப்பிலை*: 25
– *கீரை வகைகள்*: 5
– *மாங்காய்*: 50/40
– *தேங்காய்*: பொள்ளாச்சி 55/50 உடுமலைப்பேட்டை 52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
