Close Menu
    What's Hot

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழக மக்களுக்கு குட்நியூஸ்..! ஆகஸ்ட் மாதம் அதிக மழை பெய்யும்..! வானிலை மையம் தகவல்..!
    Featured

    தமிழக மக்களுக்கு குட்நியூஸ்..! ஆகஸ்ட் மாதம் அதிக மழை பெய்யும்..! வானிலை மையம் தகவல்..!

    Editor web4By Editor web4August 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியிருக்கிறது. கேரளாவில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கூட அம்மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால், இடுக்கி போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

    ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 21% வரை குறைவாக பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட 34 மாவட்டங்களில் 35 சதவீதம் மழை இயல்பை விட பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆகஸ்டு மாத வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் துரை வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்டு மாதத்தில் வட தமிழ்நாடு பகுதியில் மழை பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கலாம். வட உள்மாவட்டங்கள், மற்றும் தென் உள்மாவட்டங்களில் மழைப் பொழிவு இயல்பானதாக இருக்கக் கூடும்.

    வெப்பநிலை :

    ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பைவிட சற்று அதிகமாகவோ இருக்கக்கூடும்.

    அடிக்கடி மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவையொட்டி இருக்க வாய்ப்புள்ளது.
    குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ இருக்கக்கூடும்.

    ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை வடகடலோர தமிழக பகுதியில் மழைப்பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் மழை இயல்பானதாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடும்.

    மழைப்பொழிவு இயல்பை விட குறைவு :

    வட உள்மாவட்டங்கள் தென் உள்மாவட்டங்களில் மழை பொழிவு இயல்பானதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    ஆகஸ்டு, செப்டம்பர் கால கட்டத்தில் நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றாலும் தமிழகத்தின் கிழக்கு பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் சாதகமான மழைப் பொழிவு இருக்கும் என்றும் அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான எல்-நினோ சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தின் எஞ்சிய நாட்களில் இது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதருமபுரி : மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு..! பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போராட்டம்..!
    Next Article ’பொதுவெளியில் பட்ஜெட் ஆவணம்… ரகசிய காப்பு பிரமாணம் மீறலாகாதா?’- அதிமுக கேள்வி
    Editor web4

    Related Posts

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    August 1, 2026

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    August 1, 2026

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    இடுக்கியில் கொட்டித் தீர்க்கும் கனமழை; நெடுஞ்சாலைகளில் மண்சரிவு – மலைப்பாதைப் பயணங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை!

    பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.