Close Menu
    What's Hot

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!
    Featured

    காற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!

    editor5By editor5August 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காரைக்குடி அரசுப் பள்ளியில் அமைச்சர் வருகையின் போது மாணவர்களைக் கொண்டு அரசியல் கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிமவளத் துறை அமைச்சர் டி.கே. பிரபு காரைக்குடியில் உள்ள ஓர் அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்காகச் சென்றபோது, மாணவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு ‘டிவிகே… டிவிகே… டிவிகே’ எனக் கோஷமிடச் சொல்லப்பட்டனர்.

    அந்தக் கோஷத்தைக் கேட்டு ரசித்தபடி அமைச்சர் நடந்து சென்ற காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி வைரலாகியுள்ளன. இதைக் கண்டிக்காமல் அமைச்சர் கடந்து சென்றது பல தரப்பினரின் கடும் கண்டனத்தைத் தூண்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் அரசியல் தலையீடுகள் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    முன்னதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஒரு அரசுப் பள்ளியில் மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி, அவரது தயக்கத்தை ரீலாகப் பதிவு செய்து விமர்சித்த சம்பவம் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கட்சி நிர்வாகிகள் பள்ளிக்குள் நுழைந்து பாடங்களுக்கு இடையூறு செய்தனர். போலியோ சொட்டு மருந்து முகாமில் மக்கள் பிரதிநிதி அல்லாத ஒருவர் தலையிட்ட சம்பவமும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

    இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் நோக்கங்களுக்காகப் பள்ளிகளுக்குள் யாரும் நுழையக் கூடாது எனத் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இதுபோன்ற தலையீடுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் முதலமைச்சர் விஜய் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    ஆனாலும் அடுத்த நாளே இத்தகைய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது பதிவில், “அரசுப் பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் சொல்கிறார்? தனியார் பள்ளிகளில் இதைச் செய்வீர்களா? நீதிமன்றம் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் அரசியல் மேடைகளாக மாறக்கூடாது என்ற கருத்து பரவலாக வெளிப்பட்டு வருகிறது.

    Minister School Students TK Prabhu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேலூர்; சாலை விபத்தில் பெண் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு…
    Next Article சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  
    editor5

    Related Posts

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    August 4, 2026

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    August 4, 2026

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.